த்ரிஷா, நமிதாவைத் தொடர்ந்து நடிகை பாவனாவும் ரசிகர் மன்றம் தொடங்குகிறார். 'நவரச நாயகி பாவனா!' இதுதான் மன்றத்தின் பெயர்.
சங்கம் கண்ட மதுரையில்தான் பாவனாவின் மன்றமும் தொடங்கயிருக்கிறது. ரசிகர்கள், அவர் பெயரில் மன்றம் தொடங்கி பேனர், வினைல் போர்டு என்று கலக்கி வருகிறார்கள். இது பாவனாவின் காதுகளுக்கும் வந்தது. முதலில் மன்றம் எல்லாம் வேண்டாம் என்றவர், சுற்றியிருந்தவர் போட்ட தூபத்தால் மன்றம் அமைக்க க்ரீன் சிக்னல் காட்டியிருக்கிறார்.
ஜூன் ஆறு பாவனாவின் பிறந்தநாள். அன்று நவசர நாயகி பாவனா என்ற பெயரில் அதிகாரப்பூர்வமாக மன்றத்தை தொடங்கி வைக்க திட்டம் வைத்துள்ளார் பாவனா.
த்ரிஷா மன்றம் தொடங்கி இரண்டே படத்தில் மன்றத்தை ஏறக்கட்டினார். பாவனாவின் மன்றம் பரண் ஏறுவது எப்போது என்று பார்ப்போம்!