ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கும் போதே அடுத்தப் படத்தின் கதை கேட்டு தயாராகிவிடுவது விஜயின் ஸ்டைல். 'குருவி'யில் நடித்து வருகிறவர் அடுத்து பிரபுதேவா இயக்கும் படத்தில் நடிக்கிறார். ஐங்கரன் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்தை தொடர்ந்து ஆர்.பி. செளத்ரியின் சூப்பர்குட் ·பிலிம்ஸ¤க்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் விஜய்.
புற்றீசலாகப் புறப்பட்ட புதுமுக இயக்குனர்கள், சூப்பர்குட் ·பிலிம்ஸில் கதை சொன்னார்கள். இதில் ராமகிருஷ்ணன் சொன்ன கதை அனைவருக்கும் பிடித்திருக்கிறது. ராமகிருஷ்ணன் ஐ.வி. சசி, அற்புதன் ஆகியோரிடம் உதவியாளராக இருந்தவர்.
ராமகிருஷ்ணன் இயக்கும் படத்துக்கு அண்டவன் என்று பெயர் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இது முதல்கட்ட தகவல், இறுதிகட்டத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். கதை மாறலாம், பெயர் மாறலாம், ஏன் இயக்குனர் கூட மாறலாம்!