கவிப்பேரரசு வைரமுத்துவுக்குதான் கஷ்டம். ஐம்பது கிலோ தாஜ்மஹால் என்று ஐஸ்வர்யா ராயை இனி வர்ணிக்க முடீயாது. தாஜ்மஹால் எடையை குறைக்கப் போகிறதாம்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ரோபோவில் ரஜினியுடன் நடிப்பதை உறுதி செய்தார் ஐஸ்வர்யா ராய். அவர் சொன்ன இன்னொரு தகவல்தான் முக்கியம். ரோபோவுக்காக இளைக்கப் போகிறாராம்!
ஏற்கனவே இந்த முன்னாள் உலக அழகி உருகிப்போன ஐஸ் மாதிரிதான் இருக்கிறார். இதில் இன்னும் உடல் இளைப்பதா?
ரோபோவில் ஐஸ்வர்யா ராய் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் அப்படிப்பட்டதாம். இன்னும் 6 கிலோ எடை குறைந்தால் மட்டுமே கேரக்டருக்கு ஆப்டாக இருக்குமாம். ஆக, ரோபோவில் நாம் பார்க்கப் போவது ஐம்பது கிலோ தாஜ்மஹால் அல்ல, நாற்பத்து நான்கு கிலோ தாஜ்மஹால்!