மூன்று வருடங்கள் ஓடிய சந்திரமுகியின் சாதனைகள் இன்னும் தொடர்கிறது. பாசில் மலையாளத்தில் இயக்கிய மணிசித்ரதாழ் படத்தை ஆப்தமித்ரா என்ற பெயரில் கன்னடத்தில் ரீ-மேக் செய்தார் பி. வாசு. பிறகு அது தமிழில் சந்திரமுகியானது.
மலையாள ரீ-மேக் என்ற போதிலும் கேரளாவில் சந்திரமுகி சூப்பர் ஹிட். தமிழ், தெலுங்கிலும் வசூலில் சரித்திரம் படைத்தது.
சென்ற வெள்ளிக்கிழமை சந்திரமுகி இந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது. மொத்தம் 150 பிரிண்டுகள்! ஒரு டப்பிங் படத்துக்கு இத்தனை பிரிண்டுகள் போடப்படுவது பாலிவுட்டில் இதுவே முதல் முறை.
படத்தின் வசூலும் அமோகம் என்றார் சந்திரமுகியை இந்தியில் வெளியிட்டிருக்கும் திலீப் தன்வானி. இதில் விசேஷம் என்னவென்றால், மணிசித்ரதாழ் படத்தை பிரியதர்ஷன் பூல் புலையா என்ற பெயரில் சென்ற வருடம்தான் ரீ-மேக் செய்திருந்தார். அப்படியிருந்தும் அமோகமாக ஓடுகிறது சந்திரமுகி.
எல்லாவற்றிற்கும் காரணம் ஒரேயொரு ஆள், ரஜினி தி கிரேட்!