நிஷிகாந்த் இயக்கும் புதிய படத்திலும் மாதவனே ஹீரோ. ஹீரோயின் ஸ்ருதி கமல்ஹாசன். மாதவன் ஸ்ருதியை விட பதினைந்து வயது மூத்தவர். திரையில் அண்ணன், தங்கையாக தெரிந்தால் என்ன செய்வது?
மாதவனுக்கு இந்த சந்தேகம் உண்டு. அதனால், உடல் எடை குறைத்து அலைபாயுதே மாதவனாகும் முயற்சியில் இருக்கிறார். இப்படி எடையை ஏற்றுவதும் குறைப்பதும் மாதவனுக்கு புதிதில்லை.
தம்பி படத்துக்காக கறுத்து தாறுமாறாக உடல் எடையை ஏற்றினார். குருவுக்காக ஏற்றிய எடையை குறைக்க வேண்டி வந்தது. லண்டன் சென்று உடல் மெலிந்து திரும்பினார்.
இப்போதும் எவனோ ஒருவனுக்காக போட்ட எஸ்ட்ரா எடையை குறைக்கிறார் மாதவன். அவரது டார்கெட் எட்டு கிலோ. அது குறைந்தால் இளமை திரும்பிவிடும் என்ற நம்புகிறார்.