ஐம்பது பேரை தனியாளாக அடிப்பது, ஒரேயிரவில் சென்னை நகர ரவுடிகளை ஒழிப்பது என்று, நம்மூர் நடிகர்களின் சாதாரணப் படங்களே சக்திமான் ரேஞ்சுக்குதான் இருக்கின்றன. தமிழில் சூப்பர்மேன் பாணியிலான படங்கள் வெளிவராததற்கு இதுவும் ஒரு காரணம்.
அந்தக் குறையும் தீரப்போகிறது. சத்யம் படத்தில் நடித்துவரும் விஷால் அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கிறார். சூப்பர்மேன் போல அதிசய சக்தி கொண்டவராக இதில் நடிக்கயிருக்கிறார் விஷால். மிகுந்த பொருள் செலவில் இந்தப் படம் தயாராக இருக்கிறது.
இந்தியில் ஹிருத்திக் ரோஷன் நடித்த க்ரிஷ் வெற்றி பெற்றதுதான் விஷாலின் சூப்பர்மேன் ஆசைக்கு ஆதாரம் என்கிறார்கள்.