மினிமம் கியாரண்ட்டி நடிகர் சத்யராஜ். தங்கம், வம்புச்சண்டை இரண்டும் சூப்பர்ஹிட் இல்லையென்றாலும், காசு போட்டவர்களின் கையை கடிக்கவில்லை. தவிர, கால்ஷீட் கேட்டு அரை டஜன் பேர் க்யூவில் நிற்கிறார்கள்.
இதனால் சம்பளத்தை உயர்த்தியிருக்கிறார் சத்யராஜ். வம்புச்சண்டைக்கு முன்பு வரை கால் கோடிக்கு இவரின் கால்ஷீட் கிடைத்து வந்தது. இனி நாற்பது லட்சம் கொடுத்தால்தான் தேதி கிடைக்குமாம்.
இந்தச் சம்பள உயர்வை ஒரு விஷயமாகவே யாரும் நினைக்கவில்லை. கால்ஷீட் கேட்கும் க்யூவின் நீளம் அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. வயதாக ஆக இளமைக்குத் திரும்பும் ஒரே நடிகர் இவராகவே இருப்பார்.