எப்படியாவது எம்.ஜி.ஆராகிவிட வேண்டுமென்று துடிக்கிறார் விஜயகாந்த். கறுப்பு எம்.ஜி.ஆர்., வாழும் எம்.ஜி.ஆர். என்று போஸ்டர் அடித்து ஒட்டியவர் அது போதாது என்று தனது படத்தின் பெயரை எம்.ஜி.ஆர். என்றே வைக்க முடிவு செய்தார்.
இந்தப் பெயர் அவருக்கே அதிகப்படியாக தெரிய, தற்காலிகமாக தப்பினார் எம்.ஜி.ஆர்.
அரசாங்கத்துகூகு அடுத்து தங்கராஜ் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் விஜயகாந்த். பத்தே நாள்தான் கால்ஷீட் தருவேன் என்ற நிபந்தனையுடன் இதில் நட்புக்காக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். கட்சி, கொள்கை, எதிரிகளுக்கு சவால் என எல்லா சலம்பல்களும் இந்தப் படத்தில் உண்டு. அதற்கேற்ப படத்தின் தலைப்பை பிடியுங்கள் என மேலிடத்திலிருந்து உத்தரவு.
எங்க வீட்டுப் பிள்ளை, ஊருக்கு உழைப்பவன் என்ற ரீதியில் ஒரு டஜன் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. எம்.ஜி.ஆரின் ஆயிரத்தில் ஒருவன்தான் கேப்டனின் சாய்ஸ். அந்தப் பெயரில் செல்வராகவன் படம் இயக்குவதால், கோடியில் ஒருவன் என பெயர் வைக்கலாம் என யோசனை சொல்லப்பட்டிருக்கிறது.
கேப்டன் - கோடியில் ஒருவன்! தயாரிப்பாளர் தெருக்கோடிக்கு வராமலிருந்தால் சரிதான்.