முகம், மகளிர் மட்டும், மாயன், அவதாரம் படங்களில் நாயகனாக நடித்த நாசருக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அவர் தயாரித்த தேவதை, பாப்கார்ன் படங்களும் தோல்வியே கண்டன. குணச்சித்திர வேடமே போதும் என்றிருந்த நாசரின் மனதில் மீண்டும் நாயகன் ஆசை.
டாக்டர் ராஜேந்திர பிரசாத் நடித்த Mee Shreyobilashi படத்தை தமிழில் ரீ-மேக் செய்யும் எண்ணத்தில் இருக்கிறார் நாசர். ராஜேந்திர பிரசாத் நடித்த வேடத்தில் நாசரே நடிக்கிறார்.
தமிழில் படம் தயாரிக்க மாட்டேன் என்ற நாசரின் முடிவை ராஜேந்திர பிரசாத்தின் படம் ஆட்டம் காண வைத்துள்ளது.