சென்னை ·பிலிம்சேம்பரில் இன்றும் நாளையும் நடைபெறும் குறும்படம், ஆவணப் படம் மற்றும் விளம்பரப்பட போட்டியில் தேர்வாகும் படங்களுக்கு நாளை நடக்கும் விழாவில் இயக்குனர் பாலுமகேந்திரா விருதுகள் வழங்குகிறார்.
இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் எலக்ட்ரானிக் மீடியா மற்றும் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் துறை, தேசிய அளவிலான குறும், ஆவணம் மற்றும் விளம்பரப் படங்களுக்கான போட்டியை சென்னை ·பிலிம்சேம்பரில் இன்றும் நாளையும் நடத்துகின்றன. போட்டியை ராதிகா தொடங்கி வைக்கிறார்.
இதில் 150 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். நாளை மாலை நடக்கும் விழாவில், தேர்வு செய்யப்பட்ட சிறந்தப் படங்களுக்கு பாலுமகேந்திரா விருது வழங்கி கெளரவிக்கிறார்.