அரசாங்கம் படத்தின் தொண்ணூறு சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்துவிட்டன. மீதமிருக்கும் பத்து சதவீதத்தில் விமான நிலையத்தில் எடுக்கப்பட வேண்டிய காட்சியும் ஒன்று.
விமான நிலையத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டு நாட்கள் பல ஆகிறது. இன்னும் அதன் கதவுகள் அரசாங்கத்துக்காக திறக்கப்படவில்லை.
கூட்டம் சேர்ந்துவிடும், பயணிகளுக்கு தொந்தரவாக அமையும் என்று பல்வேறு காரணங்கள் கூறி, அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பும் தென்னக அணை ஒன்றில் படப்பிடிப்பு நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டு, கேரளாவில் படப்பிடிப்பு நடத்தினர்.
சில நாட்களுக்கு முன்புதான் 'அபியும் நானும்' படப்பிடிப்பு சென்னை விமான நிலையத்தில் நடந்தது. அப்படியிருக்க விஜயகாந்தின் அரசாங்கத்துக்கு மட்டும் கதவடைப்பு ஏன்?