கமலின் திடீர் ஆசை!

சனி, 23 பிப்ரவரி 2008 (19:22 IST)
மகள் ஸ்ருதி கமல்ஹாசன் இசை படிக்கப் போகிறேன் என்று சொன்னபோது, ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார் கமல். அதே மகள் நடிக்கிறேன் என்று வந்து நின்றபோது கொஞ்சம் ஆடித்தான் போனார்.

"ஸ்ருதி நடிக்கிறேன் என்றபோது டென்ஷனாக இருந்தது. அவரின் கதையை தேர்வு செய்யும் அறிவைப் பார்த்த பிறகு பதற்றம் நீங்கியது" என்றார் கமல்.

இப்போது அவரது விருப்பம், மகளுடன் சேர்ந்து நடிக்க வேண்டும்! அப்பா மகள் உறவைப் பற்றிய கதையாக இருந்தால் பெட்டர்.

ராதாமோகன் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டார். அபியும் நானும் கதை கமலின் ஆசைக்கு ஆப்டாக இருந்திருக்கும்!

வெப்துனியாவைப் படிக்கவும்