பார்த்திபன் இதை அறிந்தால், ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே என்று உடனடி கவிதை ஒன்றை எழுதியிருப்பார். விஷயம் வேறொன்றுமில்லை. நடிகைகள் பாவனா, காவ்யா மாதவன் இருவருக்கும் கவிதை என்றால் உயிர்.
பாவனாவின் கவிதை பத்திரிக்கையில் பிரசுரமாகியிருக்கிறது. காவ்யா மாதவனுக்கு கூச்சம். கவிதை எழுதுவதோடு சரி. பத்திரிக்கைகளுக்கு எல்லாம் அனுப்புவதில்லை.
இசையமைப்பாளர் அருண்-அனூப் இதை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டார். தான் இசையமைக்கும் ஒன் வே டிக்கெட் படத்துக்கு பாடல் எழுதித்தர காவ்யா மாதவனிடம் அவர் கேட்க, மறுநாளே எழுதித் தந்துவிட்டார் காவ்யா. ஒன்றல்ல மூன்று பாடல்கள்!
காவ்யா மாதவன் எழுதிய பாடலை அவரது குரலிலேயே பாடக் கேட்டால் எப்படியிருக்கும்? அந்த அதிர்டமும் நமக்கு இருக்கிறது. மூன்றில் ஒரு பாடலை காவ்ய மாதவனே பாட இருக்கிறாராம்.
கட்டை குரல்தான் என்றாலும் காவ்யா மாதவனின் குரலில் ஒரு 'கிக்' இருக்கத்தான் செய்கிறது.