மொழி மாற்றம் செய்யப்படும் ஸ்ரேயா படம்!
புதன், 13 பிப்ரவரி 2008 (18:12 IST)
தெலுங்கில் த்ரிஷா, ஸ்ரேயா, நயன்தாரா நடித்த படங்கள் வரிசையாக மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழில் வெளியாகின்றன. த்ரிஷா, மகேஷ் பாபுடன் நடித்த இரு படங்கள் நந்தா, குமரன் என்ற பெயரில் தமிழில் வெளிவந்து சுமாரான வரவேற்பை பெற்றன.
விரைவில் தனிக்காட்டு ராஜா என்ற பெயரில் ஒரு படம் வெளிவர உள்ளது. இந்நிலையில் ஸ்ரேயா, ரவிதேஜா, பிரகாஷ்ராஜ், நாசர் ஆகியோர் நடித்த பகிரதா படத்தை ஜில்லா என்ற பெயரில் தமிழில் வெளியிடும் வேலைகள் துரிதமாக நடந்து வருகின்றன.
ஸ்ரீ ஆர்ட்ஸ் சார்பில் மகி 'ஜில்லா'வை தமிழில் வெளியிடுகிறார். ராஜ ராஜா தெலுங்கு வசனங்களை தமிழில் எழுதியிருக்கிறார்.
'ஜில்லா'வுக்கு போட்டியாக ஜெனிலியா டிசோஸா நடித்த படம் 'கழுகு' என்ற பெயரில் நாகார்ஜூன், வெங்கடேஷ் மற்றும் ரவிதேஜாவுடன் நடித்த மூன்று படங்கள் விரைவில் தமிழ்பேச இருக்கின்றன.
2008 முடிவதற்குள் இரண்டு டஜன் தெலுங்கு படங்களாவது தமிழில் மொழிமாற்றம் செய்யப்படும் என்றார் வினியோகஸ்தர் ஒருவர்.