பொதுவாக சிம்பு நடித்த படம் என்றால் வம்புக்கு பஞ்சமிருக்காது. பொங்கலுக்கு வந்த காளை படத்தில் கடைசியாக பாடல் ஒன்றை மலேசியாவில் படமாக்கியிருக்கிறார்கள்.
சிம்பு, வேதிகா இருவரும் கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார்களாம். பில்லாவில் நயன்தாரா காட்டிய கவர்ச்சியை தூக்கி சாப்பிடுகிற அளவுக்கு ஏகத்துக்கு ஆடைக்குறைப்பு செய்து தண்ணீரில் நனைத்து எடுத்திருக்கிறார் சிம்பு.
உடலில் எதுவுமே போடவில்லை என்று யாரும் குறையாக சொல்லிவிடக்கூடாது என்பதுக்காக வேதிகாவின் தொப்புளில் ஒரு வளையத்தை மாட்டிவிட்டு, சிம்புவின் கீழ் உதட்டில் ஒரு வளையத்தை மாட்டியிருக்கிறார் சிம்பு.
படத்தை பார்த்த தணிக்கைகுழு கத்தரியை தீட்ட... விவாதம் செய்து கத்தரிக்கு அதிக வேலையில்லாமல் பார்த்துக் கொண்டார்களாம். கடைசியாக ஏ சான்றிதழ் கொடுத்துவிட்டது தணிக்கைகுழு.