பருத்திவீரன் படத்துக்கு முன்பு பிரியாமணி மூன்று படங்களில் நடித்திருக்கிறார்.
webdunia photo
WD
ஆனாலும் ராசியில்லாத நடிகை என்று ஒதுக்கி வைத்திருந்த வரை கூப்பிட்டு தனது பருத்திவீரன் படத்தில் வாய்ப்புகொடுத்தார் இயக்குனர் அமீர்.
அதன் பிறகுதான் விஷாலுடன் ஜோடி சேருகிற வாய்ப்பு கிடைத்தது.
கோவா பட விழாவில் குத்து விளக்கு ஏற்ற அழைக்கிற அளவுக்கு அங்கீகாரத்தை பருத்திவீரன்தான் ஏற்படுத்தி கொடுத்தது.
அப்படியிருக்க...சமீபத்தில் ஒரு வார இதழுக்கு அமீர் கொடுத்த பேட்டியில் பிரியாமணியை யோகி படத்திற்கு நடிக்க கேட்டதற்கு மறுத்துவிட்டார் என்பதாக குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு இயக்குனர் அமீர் எனக்கு சம்பளமே கொடுக்கவில்லை என்பதுபோல் பேட்டி கொடுத்திருக்கிறார்.
தயாரிப்பாளர் சங்கத்தில் இன்னும் பிரச்சினை நிலுவையில் உள்ளது தெரியாமல் இப்படி பேசுகிற நடிகைக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை என்று அமீர் பெருந்தன்மையோடு விட்டுவிட்டாலும்...பருத்திவீரன் யூனிட் ஆட்கள் பிரியாமணி மீது கடுமையான வருத்தத்தில் இருக்கிறார்கள்.
பருத்திவீரன் இல்லை என்றால் பிரியாமணி என்ற நடிகைக்கே தமிழில் வேலை இருந்திருக்காது இது கூட அந்தப் பொண்ணுக்கு தெரியலயே என்கிறார்கள்.