ராம‌ர் தேடிய ‌சீதை‌யி‌ல் நவ்யா நாய‌ர்

புதன், 26 டிசம்பர் 2007 (10:59 IST)
தன் உதவியாளர் ஜெகன் இயக்கத்தில் சேரன் நடிக்கும் பட‌ம் ராமன் தேடிய சீதை.

இதில் சேரனுக்கு ஜோடியாக நடிக்க எல்லா மொழி நடிகைகளையும் வரவழைத்து பார்த்து விட்டார்கள்.

ஆனால் ஒருவரும் தமிழ் முகமாக செட்டாகவில்ல என்று
நிராகரித்துவிட்டார்கள்.

சேரன் தனக்கு ஜோடியாக நவ்யா நாயரை ஒப்பந்தம் செய்யச் சொன்னார். ஆனால் படத்தின் இயக்குனர் ஜெகன் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்.

சேரனின் ஜோடி யார் என்று முடிவாகாமலே படப்பிடிப்பு
தொடங்கிவிட்டது.

வேறு கதாநாயகிகள் யாரும் செட்டாகாததால் வேறு வழியில்லாமல் கடைசியாக வருத்தத்தோடு நவ்யா நாயரையே ஒப்பந்தம் செய்திருக்கிறார் இயக்குனர் ஜெகன்.

குஷியில் இருக்கிறார் சேரன்.

வெப்துனியாவைப் படிக்கவும்