பருத்திவீரன் கார்த்திக் நடிக்கும் படம் ஆயிரத்தில் ஒருவன். செல்வராகவன் இயக்கும் இந்தப் படத்திற்கு ஏற்கனவே மாலை நேரத்து மயக்கம் என்று டைட்டில் வத்திருந்தார்கள்.
அதன் பிறகு பழைய பட செண்டிமெண்ட்டில் படத்துக்கு எம்.ஜி.ஆர் படத்தின் டைட்டிலை வைத்தார்கள்.
படம் பாதிதான் முடிந்திருக்கிறது. ஆனால் படத்தின் வெளிநாட்டு உரிமை, தொலைக்காட்சி உரிமை இரண்டுக்கும் சேர்த்து ஐந்து கோடிக்கு விலை பேசியிருக்கிறார்கள்.
முழுக்க முழுக்க காட்டுப்பகுதியில் நடக்கிற கதை.
அதற்காக சமீபத்தில் 800 பேர் கலந்துகொள்ளும் பிரம்மாண்டமான சண்டை காட்சியை சாலக்குடியில் படமாக்கியிருக்கிறார்கள்.