கடந்த பத்தாம்தேதி நடிகர் ஆர்யாவின் பிறந்தநாள். அன்று பாலாவின் நான் கடவுள் படப்பிடிப்புக்காக பெரியகுளத்தில் இருந்தார்.
படப்பிடிப்பு இருந்ததால் அன்று யூனிட் ஆட்களுக்கு பார்ட்டி கொடுக்க முடியவில்லையாம்.
அதற்கடுத்து பதினாலாம் தேதி அஜித்தின் பில்லா படமும், மிருகம் படமும் ரிலீஸானது.
அதை யூனிட் ஆட்கள் பார்க்க வேண்டும் என்று சொன்னார்களாம். ஆர்யாவின் பிறந்த நாள் எல்லாத்துக்குமாக சேர்ந்து ஒருநாள் படப்பிடிப்புக்கு விடுமுறை அறிவித்திருக்கிறார் பாலா!