ச‌ண்டை‌க் கா‌ட்‌சியை வெ‌ட்டியதா‌ல் ‌விக்ரம் வருத்தம்!

புதன், 19 டிசம்பர் 2007 (14:48 IST)
விக்ரம் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் பீமா படம் முடிந்து ரிலீஸூக்கு தயாராக இருப்பது எல்லாருக்கும் தெரியும்.

படம் முடிந்ததும் இயக்குனர், ஹீரோ, தயாரிப்பாளர் என நெருக்கமான ஆட்கள் மட்டும் படத்தை போட்டுப் பார்த்திருக்கிறார்கள்.

படம் ரொம்ப பிரமாதமாக வந்திருக்கிறதாம்.ஆனாலும் வருத்தமாக இருக்கிறார் சீயான்.

காரணம்?

படத்தில் ஒரு சண்டைக்காட்சியை வெளிநாட்டு ஃபைட் மாஸ்டரை வரவழைத்து பதினைந்து நாள் போராடி எடுக்கப்பட்டிருக்கிறது.

அந்தக்காட்சி திரைக்கு வரும்போது மிகப்பெரிய அளவில் பேசப்படுகிறா மாதிரி இருக்குமாம்.

75 லட்சம் செலவு செய்து எடுக்கப்பட்ட அநத சண்டைக்காட்சி படத்தின் கதைக்கு ஒட்டவில்லை என்று சொல்லி தூக்கிவிட்டார்களாம்.

இருக்காதா பின்னே!

வெப்துனியாவைப் படிக்கவும்