ஐங்கரன் பிலிம்ஸ், ஆனந்தா பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள அஜித்தின் பில்லா படத்தை பிரமிட் சாய்மீரா நிறுவனம் வாங்கி ஒட்டுமொத்த தமிழ்நாடும் ரிலீஸ் பண்ணியிருக்கிறார்கள்.
மொத்தம் 272 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியிருக்கிறது. படம் வெளியான நாளில் இருந்து தொடர்ந்து ஆறு நாட்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதை கூட்டிக்கழித்து கணக்குப் பார்த்தால் மொத்தம் இருபத்தைந்து கோடி வசூலாகும் என்கிறார்கள். அதன் பிறகு வசூலாவது தனி கணக்கு.
இது அஜித்தின் வரலாறு, சிவாஜி படங்களை விட அதிகம் என்கிறார்கள் பில்லாவ வாங்கிய விநியோகஸ்தர்கள்! அடேங்கப்பா!?