நடி‌க்க கச‌க்‌கிறது கலை இயக்குனரு‌க்கு

திங்கள், 17 டிசம்பர் 2007 (12:41 IST)
சார்லி சாப்ளின், சண்டை(பொறுக்கி) ஆகிய படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியவர் விஜயமுருகன். இவர் பார்ப்பதற்கு வில்லன் நடிகரை போலிருப்பார்.

அதனால் இவரை பலரும் நடிக்க கூப்பிடுகிறார்களாம். வில் படத்தில் வில்லனின் தம்பியாக நடிக்க இவரை வெத்தலை பாக்கு வைக்காத குறையாக அழைத்திருக்கிறார்கள்.

பார்ட்டி மசியவில்லையாம். காரணம் தான் ஒரு மிகப்பெரிய கலை இயக்குனராக புகழ்பெற்ற பின்புதான் மற்றவற்றில் கவனம் செலுத்துவேன் என்று தெளிவாக கூறிவிட்டாராம்.

வாய்ப்பு கிடைத்தால் நடித்துவிடலாம் என்றிருக்கும் சினிமாக்காரர்கள் மத்தியில் விஜயமுருகன் வித்தியாசமானவர்தான்.

வெப்துனியாவைப் படிக்கவும்