ஊரே கமெர்ஷியல் படம் எடுத்து கல்லாக் கட்டிக்கொண்டிருக்கும் போது பிரகாஷ்ராஜ் மட்டும் நல்ல படங்கள் எடுப்பது என்பதில் கொள்கையாக இருக்கிறார்.
தான் வளர்ந்து வந்த காலத்தில் தன்னோடு இருந்த டெக்னிஷியன் அனைவரையும் அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோவது என்ற கொள்கையில் முதலில் தயா படத்தில் செந்தில்குமாரை அறிமுகப்படுத்தினார்.
அடுத்து ராதாமோகன். வசனகர்த்தாவாக இருந்த விஜிக்கு இயக்குனராக ரீ எண்ட்ரி. அப்புறம் கேமெராமேன் ஜீவனுக்கு மயிலு பட வாய்ப்பு.
இப்போது தனது படங்களில் கேமராமேனாக இருந்த குகனுக்கு இயக்குனர் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
தெலுங்கு ஹேப்பிடேய்ஸ் படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் குகண். புதுமுக நடிகர் ஒருவர் நடிக்கவிருக்கிறார்.