தற்போதுள்ள காமெடி நடிகர்களில் முன்னனிக்கு வந்துகொண்டிருக்கும் காமெடி நடிகர் கஞ்சாகருப்பு.
webdunia photo
WD
இவர் மழைக்காகக் கூட பள்ளிக்கூடத்து பக்கம் போனதில்லை. சினிமாவில் நிறைய சம்பாதித்து ஏழைக்குழந்தைகளுக்காக ஒரு பள்ளிக்கூடம் நடத்தவேண்டும் என்ற கொள்கையோடு இருக்கும் இவர் சமீபத்தில் சுப்ரமண்யபுரம் படப்பிடிப்புக்காக திண்டுக்கல் போயிருக்கிறார்.
போன இடத்தில் ஊதுபத்திகடை நடத்தும் ஏழை ஒருவரின் இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவு முழுவதும் தான் ஏற்றுக்கொள்வதாக வாக்குகொடுத்து மிகப்பெரிய தொகை ஒன்றையும் உடனடியாக கொடுத்திருக்கிறார்.