துள்ளல் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இயக்குனர் பிரவின் காந்த் அடுத்து ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து இயக்கவிருக்கிறார்.
படத்துக்கு பேர் அய்யனார் காதலி. முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தை தன் நண்பர்களோடு சேர்ந்து பிரமிட் சாய்மீரா நிறுவனத்தோடு இணந்து தயாரிக்கிறார் பிரவின் காந்த்.
முதல் படத்தில் வடக்கத்திய ஹீரோயின்களை கொண்டு வந்தமாதிரி இல்லாமல் இந்த முறை ஹீரோயினாக நடிக்க தமிழ் முகங்களாக தேடிக்கொண்டிருக்கிறார்.