திருமண வாழ்க்கை பிரசாத்தின் மொத்த வாழ்க்கையையும் புரட்டிப்போட்டுவிட்டது. ஏற்கனவே ஒப்புக்கொண்ட புலன் விசாரணை பார்ட் டூவும் முடிந்து வெளியில் வர முடியாமல் சிக்கலில் மாட்டிக்கொண்டு நிற்கிறது.
புதிய பட வாய்ப்புகளும் இல்லை. அடுத்து என்ன செய்வதென்று அப்பா தியாகராஜனோடு உட்கார்ந்து பேசியிருக்கிறார் பிரசாந்த்.
இருபது வருஷத்துக்கு முன்னால் தியாகராஜன் நடித்து வெளிவந்த மலயூர் மம்பட்டியான் படத்தை மீண்டும் எடுக்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
அதன்படி அந்த படத்தின் கதையை இப்போதைய ட்ரெண்டுக்கு தகுந்த மாதிரி மற்றி சொந்தமாக தயாரித்து இயக்கப்போகிறார் தியாகராஜன்.