ஒரே ஷெட்யூலில் முடிந்த மயிலு

செவ்வாய், 20 நவம்பர் 2007 (11:45 IST)
இப்போதெல்லாம் ஒரே ஷெட்யூலில் எந்த படத்தின் படப்பிடிப்பும் நடந்து முடிவதில்லை. குறைந்தது இரண்டு மூன்று கட்ட படப்பிடிப்பாகத்தான் நடக்கும்.

ஆனால் பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் ஜீவன் இயக்கும் மயிலு திரைப்படத்தின் படப்பிடிப்பு உசிலம்பட்டி அருகில் ஒரே ஷெட்யூலில் நடந்து முடிந்திருக்கிறது.

அக்டோபர் 2 ல் ஆரம்பித்த ஆரம்பித்த ூட்டிங் இன்றோடு முடிகிறது. மொத்தம் நாற்பத்தைந்து நாள்களில் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டது.

போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிந்தால் படம் ரிலீஸூக்கு தயாராகிவிடும்.

மிகச்சிக்கனமாகவும் வேகமாகவும் படம் முடிந்திருப்பதால் படத்தின் தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ் சந்தோசமாக இருக்கிறாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்