கடந்த இருபது நாளாகவே எந்த படப்பிடிப்பும் இல்லாமல் வீட்டில் உட்கார்ந்திருக்கிறார் சிம்பு. காளை முடிந்துவிட்டது.
அடுத்து எல்.எம்.எம் தயாரிக்கும் சிலம்பாட்டம் படத்துக்காக டிசம்பர் எட்டாம் தேதி அவுட்டோர் போக திட்டமிட்டிருக்கிறார் இயக்குனர் சரவணன்.
இந்த கால கட்டத்தில் சந்திக்கவரும் நண்பர்கள் கேட்கும் கேள்வி. ஏன் தொடர்ந்து புது முகங்களோட படங்களிலேயே பண்றீங்க. பெரிய டைரக்டர்கள் படத்தில் நடிச்சாதான் அடுத்த கட்டத்ததுக்கு போகமுடியும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
யோசித்து பார்த்த சிம்பு... அதுவும் சரிதான்.நான் கதையில் தலையிடுவேன் என்று கிளப்பிவிட்ட வதந்திதான் எல்லாத்துக்கும் காரணம்.
இனிமேல் அப்படி இருக்கமாட்டேன் என்பதை வெளியில் உணர்த்தனும் என்று முடிவெடுத்திருக்கிறாராம்.