எ‌ன்னை வாழ வை‌த்தவ‌ர் அமீர்: நடிகர் சரவணன்!

Webdunia

செவ்வாய், 6 நவம்பர் 2007 (14:09 IST)
'பருத்தி வீரன்' படத்தில் எனக்கு வாய்ப்பு வழங்கி என்னை வாழ வைத்தவர் இய‌‌க்குன‌ர் அமீர். அவருக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன் எ‌ன்று நடிக‌ர் சரவண‌ன் கூ‌றின‌‌ா‌ர்.

'தாயுமானவன்' என்ற படத்தை எனது 26வது வய‌தி‌ல் சொந்தமாக தயாரித்தேன். அதில் நஷ்டம் ஏற்பட்டது. 1998ஆம் ஆண்டு முதல் 2002-ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் மிகவும் கஷ்டப்பட்டேன். அந்த காலக்கட்டத்தில் நான் சிரித்ததுகூட கிடையாது. என்னை சிரிக்க வைத்து 'பருத்தி வீரன்' படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கியவர் இய‌க்குன‌ர் அமீர் எனவும் சரவண‌ன் கூறினார்.

த‌ற்போது அரசியலுக்கு வரும் எண்ண‌‌மில்லை. அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தால் அ‌ப்போது நல்ல முடிவு எடுப்பேன். முடிந்த வரை ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பது தான் எனது எண்ணம். வரும் 14ஆ‌ம் தேதி புதிய படப்‌பிடி‌ப்பு தொடங்குகிறது. மேலும் இரண்டு புதிய படங்கள் நடிக்க நல்ல கதையை தேர்வு செய்துள்ளேன் எ‌ன்று நடிக‌ர் சரவண‌ன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்