பீமா ரிலீஸாவது எப்படி?

Webdunia

சனி, 3 நவம்பர் 2007 (10:42 IST)
பீமா படம் திரைக்கு வரத் தயாராக இருக்கிறது. ஆனால் படத்திற்கான நிதி நெருக்கடி மட்டும் குறைந்தபாடில்லை.

webdunia photoWD
எப்படியாவது படத்தை ரிலீஸ் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். படத்தின் கதாநாயகன் விக்ரமிடம் பத்துகோடி பணம் கொடுங்கள் படத்தின் பாட்னராகி‌க் கொள்ளுங்கள் லாபத்தில் பங்கிட்டு கொள்ளலாம் என்றிருக்கிறார்.

விக்ரம் அந்த பஞ்சாயத்தே எனக்கு வேண்டாம் என்று கழன்று கொண்டுவிட்டார். சாய்மீராவுக்கு மொத்த விநியோக உரிமையையும் கொடுக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் ஏ.எம்.ரத்னம். ஆனால் அவர் சொல்லும் விலைக்கு வாங்க முடியாது என்று சாய்மீரா மறுத்து வருகிறது.

கடைசியில் யார்தான் படத்தை ரிலீஸ் செய்யப்போகிறார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது.