ஐந்து மொழிகளிலும் ஒரே பெயரில் வெளிவரும் தசாவதாரம்

Webdunia

செவ்வாய், 16 அக்டோபர் 2007 (14:23 IST)
சிவாஜி படத்திற்கு பிறகு அனைவரின் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் தசாவதாரம்.

தமிழில் உருவாகும் இப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளிவர இருக்கிறது.

இதற்காக வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. தமிழ் தவிர மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் தசாவதாரம் என்ற பெயரிலேயே வெளிவருகிறதாம்.

தசாவதாரம் என்பது சமஸ்கிருத வார்த்தை என்பதால் எல்லா மொழிக்கும் இந்த பெயரே பொருந்திப் போய்விட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்