நான் கடவுள் படத்தில் மொத்தம் ஒப்பந்தமான நடிகைகள் எத்தனை பேர் என்று புதிர் வினா விடை வைக்கும் அளவிற்கு கதாநாயகிகளை மாற்றிவிட்டார் பாலா.
பாவனா, கார்த்திகாவிற்கு பின் இப்போது பூஜாவை நடிக்க வைக்க யோசனை செய்திருக்கிறார். பூஜாவிற்கு மேக்கப் டெஸ்ட் எடுத்து பார்த்திருக்கிறார்.
அநேகமாக பூஜாவை ஒப்பந்தம் செய்துவிடுவார் என்று சொல்கிறார்கள். பூஜா ஸ்பாட்டில் ஆஜராகி பாலாவுக்கு பிடித்த மாதிரி நடித்தால்தான் அவர் இந்த படத்தில் இருப்பது நிச்சயம்.