கைவசம் படங்கள் இல்லை... குடும்ப வாழ்க்கையிலும் பிரச்சினை என்று ஏகத்துக்கும் சிக்கலில் மாட்டி தவித்துக்கொண்டிருந்த ஸ்ரீகாந்த் ஒரு வழியாக பிரச்சினைகளிலிருந்து மீண்டு வருவதற்கான வேலைகளை செய்து முடித்திருக்கிறார்.
தான் காதலித்து திருமணம் செய்துகொண்ட பெண்ணான வந்தனாவோடு சேர்ந்து வாழ்வதென்று இரண்டு தரப்பும் பேசி முடித்திருக்கிறார்கள்.
தவிர.. இயக்குனர் பாலாவின் உதவியாளர் ரவியின் இயக்கத்தில் ஒரு படம் நடிப்பதற்கான வேலைகளும் நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே விக்னேஷ் ஹீரோவாக நடித்த ஆச்சார்யா படத்தை இயக்கியவர்தான் இந்த ரவி.