அஜித் நாலு வார்த்தை பேசினால் அதில் ஒரு முறையாவது ரஜினி பற்றி குறிப்பிடுகிறார். முன்பிருந்த தடாலடியான பேச்சுக்கள் இல்லை. எதையும் நிதானமாக யோசித்துதான் பேசுகிறார். காரணம் கேட்டால் ரஜினி சார் கொடுத்த புத்தகம் ஒன்று என் வாழ்க்கையை மொத்தமாக மாற்றிவிட்டது என்கிறார்.
என்ன புத்தகம்? லிவ்விங் வித் ஹிமாலயன் மாஸ்டர். ரஜினி அந்த புத்தகத்தை தேடிப்பிடித்து படித்த பிறகு தான் அவரது வாழ்க்கையில் பல மாற்றங்கள் நடந்ததாம்.
அஜித்தையும் அவரது மனைவி ஷாலினியையும் வீட்டுக்கு கூப்பிட்டு விருந்து கொடுத்து... கிளம்பும்போது இந்தப் புத்தகத்தை பரிசாக கொடுத்தாராம். அஜித் வாழ்க்கையிலும் அற்புதம் நிகழ்த்தியிருக்கிறது அந்த புத்தகம்!