லேசா லேசா, சினேகிதி படத்திற்கு பிறகு ப்ரியதர்ஷன் தமிழில் ஒரு படத்தை இயக்கப் போகிறார். இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். படத்திற்கு காஞ்சிபுரம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். காஞ்சிபுரம் பட்டு நெசவாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட இருக்கிறது இப்படம்.
சமீபகாலமாக கமர்ஷியல் படங்ககளையே இயக்கி கொண்டிருந்த ப்ரியதர்ஷன் அவார்டுக்கு அனுப்பும் திட்டத்தில் இப்படத்தை எடுக்கப் போகிறாராம். அதேசமயத்தில் கமர்ஷியலாகவும் இப்படம் வெற்றி அடையும் என்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்க இருக்கிறது.