ஆங்கில படங்களுக்கு நிகராக சிவாஜி திரைப்படம் உலகமெல்லாம் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது.
உலகளவில் இதுவரை எந்த தமிழ் படமும் அடையாத வணிகத்தை சிவாஜி படம் அடைந்திருக்கிறது.
அதுவும் வெளிநாடுகளில் நிறைய தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டதுதான் இதனுடைய சிறப்பு.
அமெரிக்காவில் 45 தியேட்டடர்களில் திரையிடப்பட்டிருக்கிறது.
பிரிட்டனில் 15க்கு மேற்பட்ட தியேட்டர்களிலும் மலேசியாவில் 40 தியேட்டர்களிலும் இன்னும் நிறைய ஐரோப்பிய ஆசிய நாடுகளில் திரையிடப்பட்டிருக்கிறது. வர்த்தகரீதியாக இது மாபெரும் சாதனைதான்.