அமெரிக்க விழாவில் சிவக்குமார்,கார்த்தி

Webdunia
வட அமெரிக்காவில் பெடரேசன் ஆஃப் தமிழ்சங்கமும், கரோலினா தமிழ் சங்கமும் இணைந்து தமிழ் விழா ஒன்றை நடத்துகிறது.

இதில் பருத்திவீரன் கார்த்தியும் அவர் அப்பா சிவக்குமாரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற போகின்றனர்.

இவ்விழா ஜுலை 7,8,9 தேதிகளில் நடக்க இருக்கிறது. சிவக்குமார் ஓவியக் கலையில் தான் கற்ற அனுபவம் மற்றும் சினிமாக் கலைஞர்கள், தனது சினிமா வாழ்க்கை பற்றி சிறப்புரை ஆற்றப் போகிறார்.

கார்த்தி தனது சினிமா அனுபவம் பற்றி அங்கே பேசப் போகிறாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்