வசூலில் முந்தும் சிவாஜி

Webdunia
முதல் வாரம் கொஞ்சம் டல்லாக இருப்பது போல தோன்றிய சிவாஜி படம் இந்த வாரம் தியேட்டர் நிறைய கூட்டம் கூட தொடங்கியிருக்கிறது.

போன வாரம் டல்லாக இருந்ததுக்கான காரணம் கன்னாபின்னாவென்று இருந்த டிக்கெட் விலைதானாம். இப்போது டிக்கெட் விலை குறைய கூட்டம் கட்டி ஏறுகிறதாம்.

அதுவும் வெளி மாநிலங்களில் மிகப்பெரிய வசூலை அள்ளும் என்கிறார்கள். மூன்று கோடிக்கு விற்கப்பட்ட கன்னட உரிமை 6 கோடி வசூல் செய்யும் என்கிறார்கள்.

அதேபோல் ஆந்திராவிலும் இப்போது படத்திற்கு மவுசு கூடிவிட்டதாம். 20 கோடிக்கு விற்கப்பட்ட தெலுங்கு உரிமை 40 கோடியை எட்டும் என்கிறார்கள்.

தமிழ்நாட்டிலும் பிரச்னை இல்லாமல் வசூல் சாதனை புரியும் என்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்