கால்ஷீட் பிரச்னையில் கீர்த்திசாவ்லா

Webdunia
இன்றைய தேதியில் அதிக படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சாவ்லா. சின்னபடம் பெரியபடம் என்று பாராமல், வருகின்ற வாய்ப்பையெல்லாம் ஏற்று அட்வான்ஸாக வாங்கி போட்டுக் கொண்டிருக்கிறார். பத்து படங்களுக்கும் மேல் இப்போது அவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதுவரை பிரச்னை இல்லாமல் போய்க் கொண்டிருந்த கால்ஷீட்டில் இப்போது பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. புதுமுகம் ஒருவருடன் இவர் ஜோடி சேர்ந்திருக்கும் "காதலர் கதை" படத்தின் படப்பிடிப்பு மூணாரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம்.

நான் வேறு படத்தில் இருக்கிறேன் இப்போது கால்ஷீட் இல்லை என்று சொல்லிவிட்டாராம். அவரின் கால்ஷீட் கிடைத்தால்தான் §ட்டிங் என்றகாத்து கிடக்கிறார்களாம் படப்பிடிப்பு குழுவினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்