மயிலாடுதுறை ஏவிசி காலேஜில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பழனியப்பா கல்லூரி படத்தின் பட்ஜெட் முதலில் 80 லட்சம் என்று முடிவு செய்திருந்தார்களாம். இந்நிலையில் காலேஜில் இடம்பெறும் ஒரு குத்து பாடல் ரிக்கார்டிங் முடிந்து வந்ததாம்.
பாடல் கலகலப்பாக சூப்பராக வந்திருக்கிறதாம். பாடலை கேட்ட படத்தின் தயாரிப்பாளர் பிரபாகரன் இப்போது படத்தின் பட்ஜெட்டை கூட்டியிருக்கிறாராம். பணம் செலவானாலும் பரவாயில்லை பாடலை நன்றாக எடுங்கள் என்று இயக்குனர் பவனிடம் சொல்லிவிட்டாராம்.
1 கோடியே 40 லட்சம் வரை பட்ஜெட்டை உயர்த்திவிட்டாராம் பிரபாகரன். இதனால் சந்தோசமான இயக்குனர் குஷியாக படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறாராம்.