வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் பொல்லாதவன். இந்தப் படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே பிரச்சினைகள் வந்து கொண்டிருந்தது. தயாரிப்பாளர் மாறிக் கொண்டே இருந்தார். ஒரு வழியாக எல்லாம் சரியாகி தயாரிப்பாளர் கிடைத்ததும் ரொம்ப நாளாக கதாநாயகி கிடைக்காமல் கஷ்டப்பட்டார்கள்.
"பொம்மலாட்டம்" படத்தில் நடிக்கும் காஜல் அகர்வால் கதாநாயகியாக பொல்லாதவன் படத்திற்கு புக் செய்யப்பட்டார். இப்போது சென்னையில் படப்பிடிப்பு நடத்த முடியாதபடி புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை சேரி மற்றும் ரோட்டில்தான் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படம் பிடிக்கப்படுகின்றன. படப்பிடிப்பின் போது ஏரியாவைச் சேர்ந்தவர்கள், தாதாக்கள் என்று பலரும் பணம் கொடுத்தால்தான் ஷூட்டிங் நடத்த விடுவோம் என்று சொல்லி தொந்தரவு செய்திருக்கிறார்கள்.
சென்னையே வேண்டாம் என்று ஹைதராபாத்தில் படப்பிடிப்பை வைத்துக் கொள்ளலாம் என்று கிளம்பி போய் விட்டார்களாம் படக்குழுவினர்.