கல்லீரலானது சரியாக செயல்படாமல், டாக்ஸின்கள் உடலில் இருந்து வெளியேறாமல் இருந்தால், பின் அதனால் மிகவும் மோசமான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். எனவே கல்லீரலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கும், கல்லீரலில் நோய்கள் வராமல் இருக்கவும், சரியான டயட்டை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஒரு சில பழக்கவழக்கங்களை கைவிட வேண்டும்.
கேரட்டில் உள்ள நியாசின் மற்றும் பீட்டா கரோட்டீன் கண்கள் மற்றும் கல்லீரலுக்கு நல்லது. முக்கியமாக இதில் உள்ள நியாசின், டாக்ஸின்கள் வெளியெற உதவுவதோடு, கல்லீரல் கெட்ட நச்சுக்களை உறிஞ்சாமல் தடுக்கும்.
செயற்கை சுவையூட்டிகள் மற்றும் ஃபுருக்டோஸ் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஆல்கஹாலை அளவுக்கு அதிகமாக குடித்தால், கல்லீரலின் செயல்பாடு மற்றும் ஆரோக்கியம் பாதிக்கப்படும். எனவே ஆல்கஹால் பருகுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.