இந்நிலையில், ஃபாத்திமாவின் தந்தை லத்தீப், இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் பல்வேற் பரபரப்பான தகவல்களை அவர் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது :
எனது மகளது மரணத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாகும் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும். சம்பவங்களை பார்க்கும்போது பாத்திமா மரணம் தற்கொலை போல் தெரியவில்லை. எனது மகள் ஃபாத்திமாவுக்கு மிகக் கடுமையான நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. எனது மகள் தற்கொலைக்கு பேராசியர் சதர்சன பத்மநாபன் தான் காரணம். பேராசிரியர் சதர்சன பத்மநாபனை மிகவும் மோசமானவர் என பலமுறை மகள் என்னிடம் கூறியுள்ளார்.
பாத்திமாவின் இறந்த செய்தியைக் கேட்டு நாங்கள் சென்றபோது, அறையில் கயிறு இல்லை. அதனால் சீல் வைக்கவும் இல்லை. எனது மகள் நன்றாக படிப்பவர் , எல்லா பாடங்களிலும் முதல் மதிப்பெண் எடுப்பவர் என தெரிவித்துள்ளார்.