திடீரென வெளியேறிய கோலி; உள்ளே வந்த கே.எல்.ராகுல்..! - என்ன நடந்தது?

திங்கள், 3 ஜனவரி 2022 (13:38 IST)
தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் கோலி விளையாட இருந்த நிலையில் திடீரென வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ள நிலையில் வெளியிடப்பட்டுள்ள விளையாடும் 11 வீரர்கள் பட்டியலில் விராட் கோலி பெயர் இல்லை. அதற்கு பதிலாக கே.எல்.ராகுல் இடம்பெற்றுள்ளார்.

இந்த திடீர் மாற்றம் குறித்து விளக்கமளித்துள்ள கே.எல்.ராகுல் “திடீர் மேல் முதுகு பிடிப்பு காரணமாக விராட் கோலி இந்த ஆட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர் விரைவாக குணமாகி அடுத்த ஆட்டத்தில் விளையாடுவார் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்