நியுசிலாந்து அணியின் ட்ரண்ட் போல்ட் உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக கருதப்படுபவர். இந்நிலையில் அவர் நியுசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மைய உறுப்பினர் ஒப்பந்தத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதன் மூலம் அவர் இனிமேல் நியுசிலாந்து அணிக்காக விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியது.