இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்து அசத்திய பிருத்வி ஷா!

வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (07:52 IST)
திறமை இருந்தும் போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டும் பிருத்வி ஷா இந்திய அணியில் தன்னுடைய இடத்தைத் தக்கவைக்க முடியாமல் தடுமாறுகிறார். சில ஆண்டுகளாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் பிருத்வி ஷா இந்திய அணியில் எடுக்கும் போது சொதப்புகிறார்.

இந்நிலையில் நார்தாம்ப்டனில் உள்ள கவுண்டி மைதானத்தில் சோமர்செட் அணிக்கு எதிரான ஒரு நாள் கோப்பை போட்டியில் நார்தாம்ப்டன்ஷையர் அணிக்காக 129 பந்துகளில் இரட்டை சதம் விளாசி, பிருத்வி ஷா புதன்கிழமை தனது திறமையை வெளிப்படுத்தினார்.

28 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்களுடன் 244 ரன்களை எடுத்த ப்ரித்வி ஷாவின் அட்டகாசமான ஆட்டத்தால், நார்த்தாம்டன்ஷயர் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 415 ரன்களை குவித்தது. லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் நார்தாம்ப்டன்ஷையரின் அதிகபட்ச ஸ்கோர் மற்றும் லிஸ்ட் ஏ வரலாற்றில் உலகளவில் ஆறாவது அதிகபட்ச ஸ்கோராகும்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்