ஆஸ்திரேலிய தொடரில் அதன் சொந்த நாட்டிலேயே ஆஸ்திரேலிய அணியை வெற்றிக் கொண்ட இந்தியா தற்போது இந்தியாவில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. கோலி தலைமையிலான இந்திய அணி இதற்கு தயாராகி வரும் நிலையில் இங்கிலாந்து வீரர்கள் குறித்து முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் நிறைய பில்டப்புகளை கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியா – இங்கிலாந்து போட்டி குறித்து பேசியுள்ள முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்வான் “இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாட கூடியவர்கள். இந்திய மைதானங்கள் சமதளமானவை என்பதால் இங்கிலாந்து பவுலர்களுக்கு ஏதுவாக இருக்கும். எதிரே நிற்பது சேவாக் அல்ல.. கோலி.. அவர் ஒரு தவறான பந்துக்காக காத்திருப்பார். எனவே இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் பந்தை நேராக வீசவும், மிடில் ஸ்டம்பை நோக்கி வீசவும் முயன்றாலே போதுமானது” என தெரிவித்துள்ளார்.