தற்போது இங்கிலாந்தில் நடந்து வரும் போட்டிகளிலும் கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இந்நிலையில் கோஹ்லி மீதான விமர்சனங்கள் குறித்து பேசியுள்ள ரோஹித் ஷர்மா “அவர் சிறந்த பேட்ஸ்மேன். அவரின் இடத்துக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பது நான் மறுபடியும் சொல்ல வேண்டியதில்லை. பார்ம் என்பது ஏற்ற இறக்கங்கள் உள்ளது. எல்லா வீரர்களின் வாழ்க்கையிலும் இது ஒரு பகுதிதான். அவர் மீண்டு வருவதற்கு சில இன்னிங்ஸ்கள் தேவை என நான் நினைக்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.