கடந்த இரண்டு சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக விளையாடவில்லை. அதற்காக மும்பை அணிக்காக 5 முறை கோப்பை வென்று கொடுத்துள்ள ரோஹித் ஷர்மாவை மரியாதை இல்லாமல் மும்பை இந்தியன்ஸ் நடத்துவதாக ரசிகர்கள் கொந்தளித்தனர். இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியான உடனே மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூக வலைதளப் பக்கங்களை ரசிகர்கள் அன்பாலோ செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் புதிய கேப்டனை மும்பை இந்தியன்ஸ் அணி அறிவித்து 16 மணிநேரம் ஆகியுள்ள நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து ரோஹித் ஷர்மா ஒரே ஒரு பதிவு கூட வெளியிடவில்லை என்பது அவர் எவ்வளவு அதிருப்தியில் இருப்பார் என்பதைக் காட்டுகிறது. இப்போது அவர் தென்னாப்பிரிக்கா அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.