இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நேற்று சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் 14 ஆண்டுகளாக ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவிடம் பெற்று வந்த தொடர் தோல்விகளுக்கு இந்திய அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
2023 ஆம் ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இறுதி போட்டி, 2024 ஆம் ஆண்டி 20 ஓவர் உலகக் கோப்பை தொடர் இறுதிப் போட்டி (சாம்பியன்) மற்றும் தற்போதைய சாம்பியன்ஸ் கோப்பை தொடர் என நான்கு வகை தொடர்களிலும் இந்திய அணி அவர் தலைமையில் இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.